இந்தியா
4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்
- 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வடகேரள கடற்கரை பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே, பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்களின் விவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்தபடி இருக்கிறது.
தற்போது கனமழையால் வயநாட்டில் பெரும் உயிர்ப்பலி மற்றும் சேதம் ஏற்பட்ட நிலையில், கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் விவரத்தை தெரிவித்து வருகிறது.
அதன்படி வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகேரள கடற்கரை பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.