இந்தியா

குழாயில் பிடித்து பீர் குடிக்கும் வசதி அறிமுகம்- மது பிரியர்கள் உற்சாகம்

Published On 2024-06-25 08:58 GMT   |   Update On 2024-06-25 08:58 GMT
  • பல்வேறு வடிவங்களில் டம்ளர்களை அடுக்கி வைத்துள்ளனர். இந்த டம்ளர்களை எடுத்து குழாய்களைத் திறந்தால் பீர் கொட்டுகிறது.
  • குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை கேள்விப்பட்ட குடிமகன்கள் தற்போது மதுபான கூடங்களில் குவிந்து வருகின்றனர்.

காய்ச்சிய உடனே குடிக்கும் சரக்கில் தான் மது போதை கிக் அதிகம் என மது பிரியர்கள் நினைக்கிறார்கள். மது பிரியர்களின் இந்த தீராத குறையை தீர்க்க ஐதராபாத்தில் குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபான கூடங்களில் டேப் ரூம் என்ற பெயரில் புதிய பிரிவு திறக்கப்பட்டுள்ளன.

இந்த மதுபான கூடங்களில் நண்பர்கள், கூட்டாளிகள், தோழிகள் என யாராக இருந்தாலும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த டேப் ரூம் மதுபான கூடம் பீர் பிரியர்களுக்கு ஒரு தனித்துவமான புத்துணர்ச்சியை ஊட்டும் அனுபவத்தை வழங்குகிறது. அதாவது வரிசையாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே பல்வேறு வடிவங்களில் டம்ளர்களை அடுக்கி வைத்துள்ளனர். இந்த டம்ளர்களை எடுத்து குழாய்களைத் திறந்தால் பீர் கொட்டுகிறது. அதனை பிடித்து குடிமகன்கள் அப்படியே குடிக்கலாம்.

விட்டில், கோதுமை, ஜேம்ஸ் ப்ளாண்ட், அங்கிள் டங்கிள் உள்ளிட்ட உயர் ரக பீர் வகைகள் இந்த குழாய்களில் வருகின்றன. எந்த குழாயில் எந்த வகையான பீர் வரும் என்ற பெயர் குழாய்களுக்கு மேலே அச்சிடப்பட்டுள்ளன.

இதிலும் தனித்துவம் என்னவென்றால் இந்த குழாய்களில் வரும் பீர் ஆலைகளில் இருந்து காய்ச்சிய உடனே மதுபான கடைக்கு கொண்டுவரப்பட்டு அப்படியே குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் காய்ச்சிய உடனே பீர் குடிக்கும் அனுபவம் கிடைக்கிறது. குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை கேள்விப்பட்ட குடிமகன்கள் தற்போது மதுபான கூடங்களில் குவிந்து வருகின்றனர். பல்வேறு விதமான பீர்களை அவர்களே பிடித்து ருசித்து மகிழ்கின்றனர். இந்த புதிய திட்டத்தால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மதுபான கூட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News