இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Published On 2022-11-26 10:29 GMT   |   Update On 2022-11-26 10:29 GMT
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக 613 வாக்குசாவடிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
  • வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது இறுதி வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 872 பேர் அதிகரித்துள்ளனர்.

ஜம்மு:

நாட்டின் வட எல்லையான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கொண்டு வர தேர்தல் ஆணையமும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதன்படி மாநிலத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் மற்றும் நீக்கும் பணிகள் நடந்து வந்தன. இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை ஜம்மு-காஷ்மீரின் இணை தேர்தல் அதிகாரி அனில் சல்கோத்ரா வெளியிட்டு பேசியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்கள் 83 லட்சத்து 59 ஆயிரத்து 771 பேர். இவர்களில் 42 லட்சத்து 91 ஆயிரத்து 687 பேர் ஆண்கள். 40 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேர் பெண்கள். 184 பேர் இதர பிரிவினர். மொத்த வாக்காளர்களில் 57 ஆயிரத்து 253 பேர் மாற்று திறனாளிகள்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக 613 வாக்குசாவடிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது இறுதி வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 872 பேர் அதிகரித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் இப்போது சட்டசபை தேர்தல் நடக்கிறது. இவை முடிந்த பின்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

அதன் முன்னேற்பாடாகவே இப்போது வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News