கேரளாவில் நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு
- திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை செய்து வருகிறது.
- தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாநில அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அதன்படி நர்சிங் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் ஒரு இடமும், ஜெனரல் நர்சிங் படிப்பில் ஒரு இடமும் ஒதுக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாநில அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியே செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு. செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்துவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.