உள்ளூர் செய்திகள்

குடியாத்தம்-சித்தூர் சாலையில் லாரி மோதி 3 யானைகள் பலி

Published On 2023-06-15 03:41 GMT   |   Update On 2023-06-15 04:11 GMT
  • மாங்காய் லோடு ஏற்றி வந்த லாரி திடீரென யானைகள் கூட்டத்தின் மீது மோதியது.
  • சம்பவத்தால் பலமனோர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பதி:

சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே கவுன்டன்யா வனப்பகுதி உள்ளது.

இங்கு மான், யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. தமிழக- ஆந்திர எல்லையான பேரணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு யானைகள் கூட்டம் குடியாத்தம்-சித்தூர் செல்லும் பலமனேர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றன.

அப்போது அந்த வழியாக மாங்காய் லோடு ஏற்றி வந்த லாரி திடீரென யானைகள் கூட்டத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 2 பெண் யானைகள், ஒரு ஆண் யானை பரிதாபமாக துடிதுடித்து இறந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட வன அலுவலர் சைதன்ய குமார் ரெட்டி, பலமனேறு ரேஞ்சர் சிவனா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

லாரி மோதியதில் இறந்த யானைகளை மீட்டனர். மேலும் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் பலமனோர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News