இந்தியா

அகமதாபாத்தில் பொங்கல் விழாவிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

Published On 2023-01-22 13:24 GMT   |   Update On 2023-01-22 13:24 GMT
  • பொங்கல் விழாவிற்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • பிரதமர் மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத் என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் அன்னாமலையை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இன்று காலையில் புறப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. இவருடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், பொங்கல் விழாவிற்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், பொங்கல் விழாவில் கலந்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மேடையில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "விட்டு கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு குஜராத் வாழ் தமிழர்கள் உதாரணம். குஜராத் மாநிலம் புனிதமானது. மகாத்மா காந்தியை பெற்றெடுத்த மண் குஜராத்.

பிரதமர் மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News