இந்தியா

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

Published On 2023-02-03 06:15 GMT   |   Update On 2023-02-03 06:33 GMT
  • பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் இன்று காலை கூட்டம் தொடங்கியது.
  • எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் இரு அவைகளிலும் கடும் அமளி.

2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நேற்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது, அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News