இந்தியா

பத்மநாபபுரம் அரண்மனை ஊழியர்கள் திடீர் போராட்டம்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2023-07-25 06:00 GMT   |   Update On 2023-07-25 06:00 GMT
  • அரண்மனைக்கு திங்கட்கிழமை விடுமுறை நாளாகும்.
  • பத்மநாபபுரம் அரண்மனையை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்

தக்கலை:

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் ஒன்று. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம்.

இந்த அரண்மனைக்கு திங்கட்கிழமை விடுமுறை நாளாகும். அதன்படி, நேற்று விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இன்று காலை ஏராளமானோர் வாகனங்களில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்தனர். அவர்கள் வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தபோதிலும் அரண்மனை நுழைவு வாயில் திறக்கப்படவில்லை.

இதுபற்றி விசாரித்த போது, அரண்மனையில் பணி செய்யும் 55 தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால்தான் இன்று காலை அரண்மனை கதவு திறக்கப்படவில்லை.

இதனால் பத்மநாபபுரம் அரண்மனையை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.

Tags:    

Similar News