இந்தியா
கோழிக்கோட்டில் பிளஸ்-2 மாதிரி தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானது
- பாதுகாக்கப்பட்ட தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் பரவியது எப்படி? என்பது தெரியவில்லை.
- தேர்வு நப்பதற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியாகியது உறுதி செய்யப்பட்ட போதிலும், அது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகிவரும் வகையில், அவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆங்கில பாடத்துக்கான தேர்வுத்தாள், தேர்வு நடப்பதற்கு முன்னதாகவே மாணவ-மாணவிகளின் வாட்ஸ்-அப்பில் பரவியதாக தெரிகிறது. பொதுவாக தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஒருவாரத்துக்கு முன்பாகவே பள்ளி அலுவலகத்தின் லாக்கர்களில் வைக்கப்படும்.
அவை தேர்வு நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு தான் அங்கிருந்து எடுக்கப்படும். அப்படி பாதுகாக்கப்பட்ட தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் பரவியது எப்படி? என்பது தெரியவில்லை. தேர்வு நப்பதற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியாகியது உறுதி செய்யப்பட்ட போதிலும், அது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை.
இதனால் அது தொடர்பாக விசாரணை எதுவும் நடக்கவில்லை என தெரிகிறது.