இந்தியா
null

உலகக் கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Published On 2023-08-24 16:18 GMT   |   Update On 2023-08-24 23:25 GMT
  • உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.
  • இன்றைய டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக தமிழக வீரர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று இருந்த மேக்னஸ் கார்ல்சனுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி கடைசி தருவாயில் இரண்டாவது இடம் பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், உலகக் கோப்பை செஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். அதில், "உலகக் கோப்பை செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவை நினைத்து நாங்கள் பெருமை அடைகிறோம். அவர் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, தன்னை எதிர்த்து விளையாடிய மேக்னஸ் கார்ல்சனுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தினார். இது சிறிய தோல்வியே கிடையாது. அடுத்து வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News