இந்தியா
ஊழல் எதிர்ப்பு ஹெல்ப்லைன் மூலம் 3 லட்சம் புகார்- பஞ்சாப் அரசு
- ஊழலுக்கு எதிரான புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் ஆய்வு செய்கிறது.
- பஞ்சாப்பை ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசில், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் ஆடியோ அல்லது வீடியோக்களை அனுப்புவதற்கு மக்களை அனுமதிக்கும் ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து, ஊழலுக்கு எதிரான புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் ஆய்வு செய்கிறது.
அதன்படி, ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், ஊழலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தினமும் 2500 புகார்கள் பெறப்படுவதாக பஞ்சாப்பை ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், எங்கள் கனவு-- ஊழல் இல்லாத பஞ்சாப் என்று குறிப்பிட்டிருந்தது.