40 வயதிற்குள் புகைப்பிடிப்பதை நிறுத்தினால் ஆயுள் கூடும்- புதிய ஆய்வில் தகவல்
- சிகரெட் பிடிப்பதை கைவிட்டால் 3 மடங்கு இறப்பு அபாயத்தை தவிர்க்கலாம்.
- 3 ஆண்டுகளுக்கு குறைவாக சிகரெட் பிடிப்பவர்கள் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது.
திருப்பதி:
டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த டல்லா லானா பொது சுகாதார மையத்தை சேர்ந்த பேராசிரியர் பிரபாத் ஜா ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
40 வயதிற்குள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டால், புகை பிடிக்காதவர்கள் போலவே நீண்ட நாள் வாழ முடியும். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, கன்னடா, மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த 40 வயது முதல் 79 வயது வரை உடைய1.5 மில்லியன் சிகரெட் பிடிப்பவர்கள் மற்றும் பிடிக்காதவர்களிடம் ஆய்வு நடத்தினார்.
சிகரெட் பிடிப்பதை கைவிட்டால் 3 மடங்கு இறப்பு அபாயத்தை தவிர்க்கலாம்.
மேலும் 12 முதல் 13 ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழலாம். 3 ஆண்டுகளுக்கு குறைவாக சிகரெட் பிடிப்பவர்கள் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது.
இதனால் பெரிய நோய்களிலிருந்து அபாயத்தை குறைக்கலாம் சிகரெட் பிடிப்பதன் மூலம் வாஸ்குலர் மற்றும் புற்றுநோயால் இறக்கும் ஆபத்தை குறைக்கலாம். மேலும் நுரையீரல் நோய்களிலிருந்து விடுபடலாம்.
இவ்வாறு அவர் ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.