இந்தியா
மாட்டு சாணத்தில் காகிதம் தயாரித்த இந்தியர்- அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து அசத்தல்
- மாட்டு சாணம் மூலம் தான் தயாரித்த பொருட்களை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார்.
- ஆலையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பீம்ராஜ். பல ஆண்டுகளாக அச்சகம் நடத்தி வரும் இவர் கடந்த 2017-ம் ஆண்டு மாட்டு சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தனது திட்டத்தில் பின் வாங்காத அவர் மீண்டும் சாணத்தில் இருந்து காகிதம் தயாரித்து சந்தைப்படுத்தினார்.
மாட்டு சாணம் மூலம் டைரி, காலண்டர், பைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து சந்தைப் பத்தியதோடு அதற்கான காப்புரிமையையும் பெற்றார். நாளடைவில் இவரது பொருட்களுக்கு அமோக வரவேற்பு ஏற்பட்டது. இதனால் சாணம் மூலம் தான் தயாரித்த பொருட்களை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார். தற்போது இவர் நடத்தி வரும் ஆலையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.