இந்தியா
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்வு
- வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
- கடந்த மாதம்தான் ரெப்போ வட்டி விகிதம் 0.50 காசுகள் உயர்த்தப்பட்டது.
ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மேலும், வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 2023-24 நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.6 சதவீதமாக இருக்கும் என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
கடந்த மாதம்தான் ரெப்போ வட்டி விகிதம் 0.50 காசுகள் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.