இந்தியா
இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு- சாலை துண்டிப்பால் மக்கள் அவதி
- சாலையில் இருந்து பாறாங்கற்கள் அகற்றப்படும் வரை போக்குவரத்தக்துக்கு தடை.
- சாலை விரைவில் சுத்தம் செய்யப்படும் என எல்லை சாலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மணாலி தாலுகாவில் உள்ள நேரு குண்ட் அருகே இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக, சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. சாலையில் இருந்து பாறாங்கற்கள் அகற்றப்படும் வரை போக்குவரத்து பல்சான் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குலு மாவட்ட நிர்வாகம், சாலையை சீரமைக்க எல்லை சாலைகள் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சாலை விரைவில் சுத்தம் செய்யப்படும் என எல்லை சாலை அமைப்பு தெரிவித்துள்ளது.