இந்தியா

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு

Published On 2023-01-25 03:42 GMT   |   Update On 2023-01-25 03:42 GMT
  • வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • பள்ளியில் 53 மாணவர்களில் 20 பேர் அந்த மதிய உணவை சாப்பிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு டெல்லியின் ஷாதாரா மாவட்டத்தில் உள்ள டெல்லி அரசுப் பள்ளியில் நேற்று மதியம், மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.

வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.

கடந்த ஜனவரி 12ம் தேதி மேற்கு வங்காளத்தின் பிர்பும் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மதிய உணவோடு சிறிய பாம்பு ஒன்றையும் சேர்த்து சமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள் அனைவரும் உடனடியாக ராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

பள்ளியில் 53 மாணவர்களில் 20 பேர் அந்த மதிய உணவை சாப்பிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதிய உணவை சமைத்த பள்ளி ஊழியர் ஒருவர், பருப்பு இருந்த பாத்திரத்தில் பாம்பு இருப்பதாக கூறியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

Tags:    

Similar News