வெளிநாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ?- சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
- குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
- மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குரங்கு அம்மை தொற்று இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றார்.
சம்பந்தப்பட்ட நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் காட்டியதாகவும், வெளிநாட்டில் உள்ள குரங்கு அம்மை நோயாளி ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறினார்.
மேலும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.