தெலுங்கானாவில் கலெக்டர் மீது தாக்குதல்- முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 17 பேர் கைது
- நிலம் கையகப்படுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர்.
- கலெக்டர் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக நரேந்திர ரெட்டியை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், துடியாலா அடுத்த லகசர்லா பகுதியில் 1,350 ஏக்கர் பரப்பளவில் அரசு சிப்காட், மருந்து நிறுவனம் அமைக்க முடிவு செய்தது. சிப்காட் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்காக நிலம் கையகப்படுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது கிராம மக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை தாக்கி ஓட ஓட விரட்டினர். கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய கிராம மக்கள் 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் விகாரபாத் கோடங்கல் பி.ஆர்.எஸ். முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர ரெட்டி இன்று காலை கே.பி. ஆர் பூங்காவில் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு வந்த போலீசார் கலெக்டர் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக நரேந்திர ரெட்டியை கைது செய்தனர்.