இந்தியா
கிலோ ரூ.3-க்கு விற்பனை: தக்காளிகளை சாலையோரங்களில் கொட்டி சென்ற வியாபாரிகள்
- ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- ஒரு சில விவசாயிகள் தக்காளியை பறித்து தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.
திருப்பதி:
தக்காளி வரத்து கடந்த மாதம் குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் ரூ.200க்கு விற்பனையான தக்காளி தற்போது 3 ரூபாயாக குறைந்து உள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
விவசாயிகள் எதிர்பார்த்த அளவு தக்காளி விலை போகாததால் தக்காளி பறிக்கும் கூலி மற்றும் போக்குவரத்து செலவு கூட மிஞ்சவில்லை எனக்கூறி தக்காளியை சாலையோரங்களில் கொட்டி சென்றனர். ஒரு சில விவசாயிகள் தக்காளியை பறித்து தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.