இந்தியா

ரக்‌ஷாபந்தன் முன்னிட்டு பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணம்

Published On 2022-08-06 02:56 GMT   |   Update On 2022-08-06 03:23 GMT
  • வடமாநிலத்தில் பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணம்.
  • ஆகஸ்ட் 10 நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை பெண்கள் 48 மணிநேரம் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

ரக்‌ஷாபந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வடமாநிலத்தில் பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணத்தை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சகோதரத்துவத்தை போற்றும் இந்த பண்டிகையை முன்னிட்டு அம்மாநில பெண்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பரிசாக இலவச பேருந்து பயணம் கருதப்படுகிறது

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி உத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்துக் கழகம் மாநிலத்தின் அனைத்துப் பெண்களும் பாதுகாப்பான பயணத்திற்காக பேருந்துகளில் இலவச பயண வசதியை வழங்க வேண்டும். ஆகஸ்ட் 10 நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை பெண்கள் 48 மணிநேரம் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News