அக்னிபாத் வன்முறை 15 மாநிலங்களில் பரவியது-தீ வைப்பில் மேலும் ஒருவர் பலி
- மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- வடமாநிலங்களில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் கல்வீச்சு.
புதுடெல்லி:
அக்னிபாத் ராணுவ திட்டத்துக்கு பீகார் மாநிலத்தில் தான் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு அது பக்கத்து மாநிலங்களிலும் பரவியது.
கடந்த 3 நாட்களாக வட மாநிலங்களில் அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்தது. இன்று 4-வது நாளாக போராட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
15 மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் இன்று ஏராளமான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைமை செயலகம் அருகே அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாநிலங்களில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க முற்பட்ட போது போலீசார் ஒருவர் பலியா னார். இந்த நிலையில் பீகாரில் நேற்று ஒரு ரெயிலுக்கு தீவைக்கப்பட்ட போது ரெயில் பெட்டிக்குள் ஒரு பயணி சிக்கிக் கொண் டார்.
புகை மூட்டத்துக்குள் இருந்து தப்ப முடியாத அவர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். 40 வயதான அவர் சிறிதுநேரத்தில் அந்த ரெயில் பெட்டுக்குள்ளேயே உயிரிழந்தார்.
இதனால் போராட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந் துள்ளது.