இந்தியா
14 பேரில் யாரை திருமணம் செய்யலாம்?- விவாதத்தை ஏற்படுத்திய பட்டதாரி பெண்ணின் டுவிட்டர் பதிவு
- மேட்ரிமோனி மூலம் வரன் தேடியதில் 14 பேரை இளம்பெண் தேர்வு செய்துள்ளார்.
- பெண்ணின் கோரிக்கைகள் நெறிமுறையற்றது எனவும், சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேட்ரிமோனியின் தளங்கள் மூலம் திருமண வரன்களை தேடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 29 வயதான பி.காம் பட்டதாரி பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த பெண் தற்போது வேலைக்கு எதுவும் செல்லவில்லை. அவர் மேட்ரிமோனி மூலம் வரன் தேடியதில் 14 பேரை தேர்வு செய்துள்ளார்.
மேலும் மேட்ரிமோனி மூலம் அவர் தேர்வு செய்த 14 பேரின் வயது மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களையும் பட்டியலிட்டு அவர்களில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும், அந்த நபரை தேர்வு செய்ய உதவுமாறு குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர், அந்த பெண்ணின் கோரிக்கைகள் நெறிமுறையற்றது எனவும், சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.