இந்தியா

ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் மீது படுத்து கிடக்கிறார்: ஜொமாட்டோ ஊழியரின் புகைப்படம் வைரல்

Published On 2023-05-23 09:00 GMT   |   Update On 2023-05-23 09:00 GMT
  • ஜொமாட்டோ டி-சர்ட் அணிந்த ஊழியர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மீது படுத்து கிடக்கிறார்.
  • ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு தங்களுக்கு வரும் டெலிவரி ஆர்டர்களில் 72 சதவீதம் பேர் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுப்பதாக ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுமக்கள் சிலர் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு வகைகளை கையாண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமாட்டோவில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் உணவுக்குரிய பணத்தை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றுகிறார்கள்.

இது தொடர்பாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஜொமாட்டோ டி-சர்ட் அணிந்த ஊழியர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மீது படுத்து கிடக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு தங்களுக்கு வரும் டெலிவரி ஆர்டர்களில் 72 சதவீதம் பேர் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுப்பதாக ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News