இந்தியா
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கிளினிக் வைக்க தடை - தெலுங்கானா அரசு அதிரடி
- அரசு மருத்துவமனை டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
- அரசின் இந்த உத்தரவுக்கு தெலுங்கானா ஜூனியர் டாக்டர் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐதராபாத்:
பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மருத்துவக் கல்விச் சேவைகள் விதிகளில் திருத்தங்களைச் செய்து, டாக்டர்களின் கிளினிக் பயிற்சிக்கு முழு தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.