இந்தியா (National)

அந்த மனசு தான் சார் கடவுள்.. பசுவைக் காப்பாற்ற வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்ட நபர் - வீடியோ

Published On 2024-07-08 02:14 GMT   |   Update On 2024-07-08 02:14 GMT
  • சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்
  • ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக் காப்பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் கரைபுரண்டோடி பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநிலம் முழுவதும் வெவேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 மாவட்டங்களில் அபாயகரமான முறையில் வெள்ளம் வீதிகளை அடைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதகிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றான திப்ருகார் மாவட்டத்தின் துளியாஜான் நகரில் வீதியில் ஓடும் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்த தனது பசுமாட்டை காப்பாற்றுவதற்காக உள்ளூர்வாசி ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக்  காப்பற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

இந்த  சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சாரார் அவரின் செயலைப் பாராட்டி வரும் நிலையில்  மற்றொரு சாரார் அவரின் செயல் ஆபத்தானது என்று  கமன்ட் tவருகின்றனர்.

Tags:    

Similar News