கடந்த இரண்டு ஆண்டுகளில் 243 கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்ட கேரள சப்-கலெக்டர்
- சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார்.
- ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரள ஐகோர்ட்டு பிறப்பித்த ஏராளமான உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 243 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சப்-கலெக்டர் விஷ்ணுராஜ் எதிர்கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தை பொறுத்தவரை, போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில மறுவகைப்படுத்துதல் வழக்குகள் அதிகம் என்பதால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இருப்பதால் கோர்ட்டு விதிக்கும் காலக்கொடுவுக்குள் தீர்ப்பை அமல்படுத்த முடியாததால் சப்-கலெக்டர் இத்தனை கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.