இந்தியா

டெல்லி: பாராளுமன்ற வளாக சுவரை அளவெடுத்து உள்ளே குதித்த மர்ம நபர் கைது!

Published On 2024-08-17 02:01 GMT   |   Update On 2024-08-17 02:01 GMT
  • டி-சர்ட்டும் அரைக்கால் டவுசரும் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் பல அடி உயரம் உள்ள சுவரை அளவெடுத்துக் கொண்டிருந்தார்.
  • கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நுழைந்து மர்ம நபர்கள் வண்ணப் புகைகுண்டுகளை வீசினர்.

தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தின் சுவரை அளவெடுத்து உள்ளே குதித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நேற்று மதியம் 2.45 மணியளவில் டி-சர்ட்டும் அரைக்கால் டவுசரும் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் பல அடி உயரம் உள்ள சுவரை அளவெடுத்துக் கொண்டிருந்தார்.

திடீரென சுவர்மீது ஏறி அவர் உள்ளே குதித்ததை சிசிடிவியில் பார்த்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படை போலீசார் [CISF] பார்த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரைத் தடுத்து சோதனைக்கு உட்படுத்தினர். அந்த நபரிடம் ஆயுத்தங்கள் எதுவும் இல்லை. அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது மன நலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக டெல்லி போலீசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அவரது பெயர் மனிஷ் என்றும் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி பாராளுமன்றத்தின் மக்களவைக்குள் நுழைந்து மர்ம நபர்கள் வண்ணப் புகைகுண்டுகளை வீசிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகியுள்ளது.

Tags:    

Similar News