இந்தியா
கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்திய எச்சரிக்கை பலகை... உடனடியாக மாற்றிய அதிகாரிகள்
- பெயர் பலகையில் ஆங்கிலத்தில் "அவசரமாக ஒரு விபத்தை உண்டாக்குங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.
- இதன் உண்மையான மொழிபெயர்ப்பு "அதிக வேகமே விபத்துகளுக்கு காரணம்" ஆகும்.
கர்நாடகாவில் நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள வழிகாட்டி பலகை தொடர்பான ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
கர்நாடகாவின் குடகு அருகே நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள வழிகாட்டி பலகை கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. "அவசரவே அபகதக்கே கரனா" என்ற கன்னட சொற்றொடரின் தவறான மொழிபெயர்ப்பாக ஆங்கிலத்தில் "அவசரமாக ஒரு விபத்தை உண்டாக்குங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. இதன் உண்மையான மொழிபெயர்ப்பு "அதிக வேகமே விபத்துகளுக்கு காரணம்" ஆகும்.
இந்நிலையில் இந்த தவறான எச்சரிக்கை பலகையை நீக்கிவிட்டு புதிய பலகையை நெடுஞ்சாலைத்துறை வைத்துள்ளது. புதிய பலகையில் அதிவேக பயணம் உயிரை கொல்லும் என்று கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சரியாக எழுதப்பட்டுள்ளது.