இந்தியா
தென்னிந்திய பகுதிகளில் வரும் 15ம் தேதியுடன் நிறைவடைகிறது வடகிழக்கு பருவமழை
- வடகிழக்கு பருவமழை விலகக் கூடிய சாதகமான சூழல் நிலவி வருகிறது.
- வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கியது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தென்னந்திய பகுதிகளில் இருந்து, வரும் 15ம் தேதியுடன் விலக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வரும் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை விலகக் கூடிய சாதகமான சூழல் நிலவி வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.