நண்பரின் மனைவிக்கு கேன்சர்... சிகிச்சைக்காக பைக்குகளை திருடியவர் கைது
- பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார்.
- அசோக் கூறிய தகவல்கள் போலிசாரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
பெங்களூரில் பழ வியாபாரம் செய்து வந்தவர் அசோக். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார்.
இதனால் அடிக்கடி கைதாகி சிறைக்கு செல்வதை அசோக் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அசோக்கின் மனைவி அவரை விட்டு புரிந்துள்ளார்.
சமீபத்தில் பெங்களூரு கிரி நகரில் ஒரு ஐடி ஊழியரின் பைக் ஒன்றை அசோக்கும் அவரது கூட்டாளி சதீசும் சேர்ந்து திருடியுள்ளனர்.
இந்த வழக்கின் அசோக் மற்றும் சதீஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த வழக்கின் விசாரணையில் அசோக் கூறிய தகவல்கள் போலிசாரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
"என் நண்பரின் மனைவி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பைக்கை திருடி விற்ற பணத்தை முழுவதும் அவரின் சிகிச்சைக்காக கொடுத்துவிட்டேன். என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்ற போது அந்த நண்பர் தான் எனக்கு ஆதரவு கொடுத்தார். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த உதவியை செய்ததாக" அசோக் தெரிவித்துள்ளார்.