இந்தியா

இது ஒரு வரலாற்று பதக்கம்- மானு பாகெருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2024-07-28 11:32 GMT   |   Update On 2024-07-28 11:32 GMT
  • ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
  • கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.

8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியதில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இது ஒரு வரலாற்றுப் பதக்கம்!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் சிறப்பான விளையாட்டால், இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மானு பாகெர்-க்கு வாழ்த்துகள்.

வெண்கலத்திற்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது.

நம்பமுடியாத சாதனை!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News