இந்தியா

சென்ட்ரல்-க்கு டஃப் கொடுக்கும் ரெயில் நிலைய பெயர்.. என்னவா இருக்கும்?

Published On 2024-08-25 07:11 GMT   |   Update On 2024-08-25 07:11 GMT
  • ஒரு ரெயில் நிலையத்திற்கு சூட்டப்பட்டு இருக்கும் மிக நீண்ட பெயர்.
  • மிகப்பெரிய பெயரை கொண்ட ரெயில் நிலையம் எங்கு உள்ளது?

உலகின் மிகப்பெரிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இந்திய ரெயில்வே விளங்குகிறது. நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்களை இணைக்கும் ரெயில்வே துறை பயணிகளுக்கு சவுகரியமான பயணத்தை குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

இத்தகைய பெருமை மிக்க இந்திய ரெயில்வே துறை மற்றும் அதன் சேவைகளில் ஏராளமான சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளது. அந்த வகையில், ஒரு ரெயில் நிலையத்திற்கு சூட்டப்பட்டு இருக்கும் மிக நீண்ட பெயர் என்ற பெருமை சென்னையில் உள்ள "புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் மத்திய ரெயில் நிலையம்" கொண்டுள்ளது.

 


ஆனால், இந்த பெயர் அதிக இடைவெளி மற்றும் வார்த்தைகளை கொண்டுள்ளது. வார்த்தைகளில் இடைவெளி இன்றி நாட்டின் மிகப்பெரிய பெயரை கொண்டுள்ள ரெயில் நிலையம் எங்கு உள்ளது என்று தெரியுமா?

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டிய ஆந்திர பிரதேச மாநிலத்தின் "வெங்கடநரசிம்ஹராஜூவரிபேட்ட" (Venkatanarasimharajuvaripeta) இந்தியாவில் ஒரே வார்த்தையை மிக நீண்ட பெயர் கொண்ட ரெயில் நிலையம் ஆக இருக்கிறது.

Tags:    

Similar News