null
பிரதமர் மோடி கான்வாய் மீது செருப்பு வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது - ராகுல்காந்தி
- மோடி சென்ற வாகனத்தில் செருப்பு தூக்கி வீசப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை.
தான் போட்டியிட்டு வென்ற தொகுதியான வாரணாசி தொகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றிருந்தார். அப்போது மோடி சென்ற வாகனத்தில் செருப்பு தூக்கி வீசப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "பிரதமர் மோடி கான்வாய் மீது காலணி வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும்; ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநட்டே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், மோடியின் வாகனத்தின் மீது செருப்பு வீசியது தவறுதான். ஆனால், அவ்வாறு செய்வதற்கு அவர்கள், தங்கள் பிரதிநிதி மீது எவ்வளவு அதிருப்தி அடைந்திருப்பர் என புரிந்துகொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.