null
திருப்பதி லட்டு விவகாரம்.. அதிகாரிகள் மதத் தலங்களின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் - ராகுல் காந்தி
- கோடிக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்குரிய தெய்வம் பாலாஜி.
- இந்த பிரச்சினை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்.
உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் இடமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம்.
திருப்பதி கோவிலில் வழங்கும் லட்டு பிரசாதம் தயாரிப்பில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயப்படுத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சம்பம் வருத்தமளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் பிரசாதத்தில் கலப்படம் சேர்க்கப்பட்டது குறித்த வெளியாகி இருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்குரிய தெய்வம் பாலாஜி."
"இந்த பிரச்சினை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும். இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.