இந்தியா
"துரோகி ஏக்நாத் ஷிண்டே.." ஸ்டூடியோவை அடித்து உடைத்த வீடியோவை பகிர்ந்து மீண்டும் கலாய்த்த மகா. காமெடியன்

"துரோகி ஏக்நாத் ஷிண்டே.." ஸ்டூடியோவை அடித்து உடைத்த வீடியோவை பகிர்ந்து மீண்டும் கலாய்த்த மகா. காமெடியன்

Published On 2025-03-25 17:33 IST   |   Update On 2025-03-25 17:37:00 IST
  • தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை
  • மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததை சுட்டிக்காட்டினார்.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார். சிவசேனாவின் இருந்த ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவிக்கு தாவிய ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னணியிலேயே ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா விமர்சித்திருந்தார்.

ஆனால் அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர்.

போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மேலும் குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜாராக 1 வார காலம் குணால் கம்ரா அவகாசம் கேட்டுள்ளார்.

காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது ஷிண்டேவுடன் கூட்டணியில் உள்ள மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததையும் குணால் கம்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.

அதோடு நிற்காமல் தனது ஸ்டூடியோவை சேனா தொண்டர்கள் அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள குணால் கம்ரா அவர்களை கிண்டல் செய்து பாடல் ஒன்றையும் பாடி மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளார். தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.  

Tags:    

Similar News