இந்தியா
புலிகள் காப்பகத்தில் குட்டிகளை கொன்ற சிறுத்தைகள்
- 4 புலிக்குட்டிகளில் 2 குட்டிகள் ராஜாஜி புலிகள் காப்பகத்தில் உள்ள சிறுத்தைகளால் கொல்லப்பட்டுள்ளது.
- சில்லாவலி மலைத்தொடரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட புலிகளுக்கு கடந்த மே மாதம் 24-ந்தேதி 4 குட்டிகள் பிறந்தது.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ராஜாஜி புலிகள் காப்பகத்தில் 2 புலிக்குட்டிகளை சிறுத்தைகள் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கார்பெட் புலிகள் காப்பகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட 4 புலிக்குட்டிகளில் 2 குட்டிகள் ராஜாஜி புலிகள் காப்பகத்தில் உள்ள சிறுத்தைகளால் கொல்லப்பட்டுள்ளது.
2 குட்டிகளில் ஒரு ஆண் புலி குட்டி என்றும் மற்றொன்று பெண் புலி குட்டி என்றும் ராஜாஜி புலிகள் காப்பக அதிகாரி சங்கீத் படோலா கூறினார். குட்டிகள் இரண்டும் 1 முதல் 1 1/2 மாத குட்டிகள் என்று அவர் தெரிவித்தார்.
சில்லாவலி மலைத்தொடரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட புலிகளுக்கு கடந்த மே மாதம் 24-ந்தேதி 4 குட்டிகள் பிறந்தது. தற்போது 2 குட்டிகள் மட்டுமே உயிருடன் உள்ளன.