இந்தியா

ரூ. 250 கோடி மோசடி.. போலீஸ் வலையில் சிக்கிய 'விஐபி' - அப்புறம் நடந்த டுவிஸ்ட்

Published On 2024-09-04 09:48 GMT   |   Update On 2024-09-04 09:48 GMT
  • அஸ்வினி குமார் என்ற இளைஞருக்கு வாட்சப்பில் வேலைவாய்ப்பு குறித்து ஒரு செய்தி வந்துள்ளது.
  • தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களையும் யாரென்றே தெரியாத நபருக்கு அவர் அனுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர் ஒருவர் சுமார் ரூ. 250 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி இ-வே பில்லிங் பரிவர்த்தனைகள் தொடர்பான பெரும் மோசடியில் சிக்கியுள்ளார்.

ஜிஎஸ்டி அதிகாரிகள் அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று அவரது பெயரை பயன்படுத்தி ரூ.250 கோடிக்கு மோசடி நடந்துள்ளதை அவரிடம் தெரிவித்த பின்பு தான் அவருக்கே அந்த விஷயம் தெரிய வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்வினி குமார் என்ற இளைஞருக்கு வாட்சப்பில் வேலைவாய்ப்பு குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது வீட்டு மின் கட்டணம், தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் யாரென்றே தெரியாத நபருக்கு அவர் அனுப்பியுள்ளார்.

வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.1,750 பணத்தையும் அவர் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவரது தகவல்களை தவறாக பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கி ஒரு நிறுவனத்தை தொடங்கி சுமார் ரூ.250 கோடி இ-வே பில்லிங் மோசடி நடந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க ஜிஎஸ்டி துறை உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக எஸ்.பி. ஆதித்யா பன்சால் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News