இந்தியா
இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது - மத்திய இணை மந்திரி
- 2014-ல் இந்தியர்கள் பயன்படுத்திய 92 சதவீத செல்போன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
- ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாமர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் கையிலும் நிச்சயமாக இருப்பது செல்போன்தான்.
இந்நிலையில், இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
2014-ம் ஆண்டு இந்தியர்கள் பயன்படுத்திய 92 சதவீத செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. தற்பொழுது அந்த நிலை மாறி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 97 சதவீத செல்போன்களை இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.
மேலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் மதிப்பு 12 பில்லியனை எட்டியுள்ளது என தெரிவித்தார்.