இந்தியா
நெல் உள்ளிட்ட 17 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு
- நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 17 வகை பயிர்களின் கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.
நெல் உள்ளிட்ட 17 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என தெரிவித்தார்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தி ரூ2,040 ஆக அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.
எள் குவிண்டாலுக்கு ரூ.523, பாசி பருப்பு குவிண்டாலுக்கு ரூ.480 உயர்த்தியும், சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.385 உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.