இந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்யும் உத்தரகாண்ட் மாநில முதல்வர், கேபினட் மந்திரிகள்

Published On 2024-02-20 04:36 GMT   |   Update On 2024-02-20 04:36 GMT
  • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
  • தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்பின் பொதுமக்கள் பகவான் ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி சென்று ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியா அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் காத்திருக்கவும் என பா.ஜனதா கேட்டுக்கொண்டது.

அதனால் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநில முதல்வர புஷ்கர் சிங் தாமி தனது மந்திரிசபை மந்திரிகளுடன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று உத்தரகாண்டில் இருந்து விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டனர். அப்போது ஜெய் சிய ராம் என முழங்கினர்.

Tags:    

Similar News