இந்தியா (National)

உணவில் எச்சில் துப்பிய விவகாரம்- போலீஸ் பாதுகாப்பு, அபராதம்.. புது ரூல்ஸ் போட்ட உத்தரகாண்ட் அரசு

Published On 2024-10-18 03:29 GMT   |   Update On 2024-10-18 03:29 GMT
  • உணவு மாசுபாடு கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
  • சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

உணவு மாசுபாடு மற்றும் உணவில் எச்சில் துப்புவதை தடுக்க உத்தரகாண்ட் அரசு கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், உணவு மாசுபாடு கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஓட்டல் மற்றும் தாபா ஊழியர்களை போலீசார் சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதை அவர் "தூக் ஜிஹாத்" என்று குறிப்பிட்டார்.

சமீபத்தில், சுற்றுலா பயணிகளுக்கு பழச்சாற்றில் எச்சில் துப்பியதற்காக முசோரியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

டேராடூனில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ரொட்டிக்கு மாவை தயார் செய்யும்போது சமையல்காரர் எச்சில் துப்பிய வீடியோ சமீபத்தில் வைரலானது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சர் தன் சிங் ராவத், வர இருக்கும் பண்டிகை காலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தூய்மையை உறுதி செய்வதே முதன்மையானது என்று கூறினார்.

Tags:    

Similar News