இந்தியா

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித்தவித்த 30 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

Published On 2024-09-15 10:05 GMT   |   Update On 2024-09-15 10:05 GMT
  • மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.
  • அரை மணி நேரத்திற்கு ஐந்து பேர் வீதம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.

கீழே இறங்கி வர முயன்றபோது கற்கள் விழுந்ததால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் சிக்கித் தவித்தனர். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என கூறப்பட்டது. நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அரை மணி நேரத்திற்கு ஐந்து பேர் வீதம் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தமிழர்கள் நாளை இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.

Tags:    

Similar News