இந்தியா

தேசிய கீதத்திற்கு மரியாதை... மனதை கவரும் வீடியோ

Published On 2024-10-26 02:27 GMT   |   Update On 2024-10-26 02:27 GMT
  • தொழிலாளி, பெயிண்ட் வாளியில் குச்சியை பிடித்தபடி, அசையாமல் நிற்கிறார்.
  • சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாராட்டி ‘லைக்’ தெரிவித்து உள்ளனர்.

தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து அமைதியாக நேராக நிற்க வேண்டும், கொடி வணக்கம் செய்ய வேண்டும். அதுவே மரியாதை.

இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் மனதை கவரும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. பள்ளி கட்டிடத்தின் உச்சியில் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பள்ளியில் தேசிய கீதம் ஒலிக்கும்போது அசையாமல் நிற்கும் காட்சியே அது.

பல தளங்களைக் கொண்ட பள்ளி கட்டிடத்தில், ஒரு பக்கவாட்டு சிமெண்டு சிலாப்பில் நின்றபடி அவர் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். பள்ளியின் வகுப்பறை ஒன்றில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. பள்ளி முடியும் தருணத்தில் தேசிய கீதம் ஒலிப்பரப்பப்படுகிறது. அதை கேட்டதும் அந்த தொழிலாளி, பெயிண்ட் வாளியில் குச்சியை பிடித்தபடி, அசையாமல் நிற்கிறார்.

ஆனால் மாணவர்களோ பேசுவதும், நடப்பதுமாக இருப்பது கேட்கிறது. கட்டிடத்தின் உயரத்தில் ஒரு நுனியில் நின்றபோதும் தேசிய கீதத்திற்கு அந்த தொழிலாளி கொடுத்த மரியாதையை வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், பெரிதும் பாராட்டி பதிவிட்டனர். வீடியோவை 2 நாட்களில் 3.7 கோடி பேர் பார்த்து உள்ளனர். சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாராட்டி 'லைக்' தெரிவித்து உள்ளனர்.



Tags:    

Similar News