இந்தியா

மகள் ஷர்மிளாவுக்கு வாக்களியுங்கள் - தாய் விஜயம்மாவின் வீடியோ வைரல்

Published On 2024-05-11 11:37 GMT   |   Update On 2024-05-11 11:42 GMT
  • ஆந்திரா தேர்தல் களத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் vs தெலுங்கு தேசம் இடையேதான் கடும் போட்டி.
  • ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெறுகிறது.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா, கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். ஆந்திரா சட்டசபை தேர்தல் களத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்- பா.ஜ.க. - ஜனசேனா மற்றும் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆந்திரா தேர்தல் களத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் vs தெலுங்கு தேசம் இடையேதான் கடும் போட்டி. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லாத காங்கிரஸ் இம்முறை ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளா ஆகியோரின் தாயார் விஜயம்மா, எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடப்பாவில் போட்டியிடும் தனது மகளிற்கு ஆதரவளிக்கும் விதமாக 'ஷர்மிளாவிற்கு ஓட்டு போடுங்கள்' என்று மக்களை வலியுறுத்தி தனது விருப்பத்தை தெரிவித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News