ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் இந்த ஆட்சிக்கு வாக்களியுங்கள்- ஜெகன்மோகன் ரெட்டி
- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார்.
- ஆந்திராவில் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.
நான்காவது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற வருகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடப்பா தொகுதியின் ஜெயமஹால் அங்கனவாடி வாக்குச் சாவடி எண் 138ல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார்.
#WATCH | Kadapa: Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy casts his vote at Kadapa Constituency's Jayamahal Anganawadi Polling Booth No. 138.
— ANI (@ANI) May 13, 2024
Congress's YS Sharmila, TDP's Chadipiralla Bhupesh Subbarami Reddy and YSRCP's YS Avinash Reddy are contesting elections from this seat.… pic.twitter.com/SsgSDyg4JZ
இத்தொகுதியில் காங்கிரஸின் ஒய்.எஸ்.சர்மிளா, தெலுங்குதேசம் கட்சியின் சாதிபிரல்லா பூபேஷ் சுப்பராமி ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அப்போது ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, "கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பார்த்துவிட்டீர்கள், இந்த ஆட்சியில் பலன் அடைந்ததாக நீங்கள் நினைத்தால், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் இந்த ஆட்சிக்கு வாக்களியுங்கள்.. என்று அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
#WATCH | Kadapa: Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy says "You have seen the governance in the last 5 years and if you think you have benefitted from this governance then vote for that governance which would lead to a brighter future..." pic.twitter.com/AjTaEY2Bi6
— ANI (@ANI) May 13, 2024