இந்தியா (National)

மிரட்டல் விடுப்பவர்கள் விமானத்தில் பறக்க தடை: சட்ட திருத்தம் கொண்டு வர திட்டம்- மத்திய அமைச்சர்

Published On 2024-10-22 04:10 GMT   |   Update On 2024-10-22 04:10 GMT
  • அச்சுறுத்தல் சம்பவங்கள் நடக்கும் போது அதனை சரியான முறையில் கையாள வேண்டும்.
  • கடந்த வாரம் மட்டும் 8 விமானங்கள் வரை திருப்பி விடப்பட்டுள்ளன.

சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இம்மாதம் 14-ந்தேதி முதல் நேற்று வரை 7 நாட்களில் கிட்டத்தட்ட 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பாதுகாப்புக்கே அரசின் முன்னுரிமை என்றும், அவ்வாறு மிரட்டல் விடுப்பவர்களை NO FLY LIST-ல் சேர்க்க விதிகள் திருத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், உள்துறை அமைச்சத்துடன் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் நடக்கும் போது அதனை சரியான முறையில் கையாள வேண்டும்.

இதெற்கென சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளன. கடந்த வாரம் மட்டும் 8 விமானங்கள் வரை திருப்பி விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அச்சுறுத்தலும் தனித்தனியே கண்காணிக்கப்பட்டது. இந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாண்டுள்ளோம். அவை போலி வெடிகுண்டு மிரட்டல்களாக இருந்தபோதிலும் பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்யவில்லை என்றார். 

Tags:    

Similar News