இந்தியா
வயநாடு நிலச்சரிவு: 8,300பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்
- 83 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்குவதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8ஆயிரத்து 300 பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்து செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.
வயநாடு நலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களை மீட்கும் பணி இன்று 3-வது நாளாக நடந்துவருகிறது. நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அவற்றை தோண்டும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.
பெரிய பெரிய பாறைகள் விழுந்ததாலும், வெள்ளத்தில் அடித்துச்செல்லப் பட்டதாலும் உடல்கள் சிதைந்தநிலையிலேயே மீட்கப்படுகின்றன. இதனால் இறந்தவர்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிறது.