இந்தியா
null

வயநாடா? ரேபரேலியா?.. ராகுல் காந்தியின் முடிவு இந்த தேதியில் தெரிய வாய்ப்பு

Published On 2024-06-15 16:28 GMT   |   Update On 2024-06-15 16:29 GMT
  • ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
  • 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்று பாராளுன்றத்தில் தங்களது கைகளை ஓங்கச் செய்துள்ளது.

காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ராகுல் நீடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எந்த தொகுயை அவர் தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே எழத் தொடங்கியது.

இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தொகுதியில் தொடர் வேண்டும் என்று மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார். வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு உள்ளதால் ராகுல் ரேபரேலியையே தேர்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

அப்படி நடக்கும் பட்சத்தில் வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்போது பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், ஜூன் 17 க்குள் இதுகுறித்து முடிவெடுப்பது அவசியம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News