ஸ்கூலுக்கு ஏன் லேட்? ஆசிரியை-தலைமை ஆசிரியை சண்டையிட்ட வீடியோ வைரல்
- தாமதமாக வருவது குறித்து தலைமை ஆசிரியை கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஆசிரியைகள் சண்டையிட்டு சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளனர்.
பள்ளி என்பது குழந்தைகளின் கல்வித்திறனை வளர்க்கும் இடமாகவும், அவர்களின் கனவுகளை நினைவாக்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு குருவாக பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் சண்டையிட்டு சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளனர்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் இரண்டு பெண்கள் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை தாமதமாக வருவது குறித்து தலைமை ஆசிரியை கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது கடைசியில் கைகலப்பில் முடிந்துள்ளது. இரண்டு ஆசிரியைகளுக்கும் இடையே வாய் சண்டை முற்றி ஒருவரையொருவர் தலைமுடியை போட்டு இழுத்து, அடித்து சண்டையிடுகின்றனர்.
இதனை அந்த பள்ளியின் வேலை பார்க்கும் ஊழியர் பார்த்து இருவரையும் பிரித்து சண்டையை நிறுத்தினார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.