செல்பி மோகம்.. 12 மணிநேரமாக பாறையிடுக்கில் சிக்கியிருந்த இளம்பெண் மீட்பு - வீடியோ
- பாறையில் நின்று செல்பி எடுக்க முயனறபோது பாறை இடுக்கில் இளம்பெண் தவறி விழுந்துள்ளார்.
- தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இளம்பெண்ணை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
கர்நாடகாவின் மைடாலா ஏரிக்கு அருகே இளம்பெண் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கியுள்ளார். கிட்டத்தட்ட 12 மணிநேர போராட்டத்திற்கு அப்பெண்ணை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள மைடாலா ஏரிக்கு தனது நண்பர்களுடன் ஹம்சா என்ற 19 வயது இளம்பெண் சென்றுள்ளார். அப்பகுதியில் ஓடும் தண்ணீருக்கு நடுவே, பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்றபோது பாறை இடுக்கில் அவர் தவறி விழுந்துள்ளார்.
உடனே அவளது நண்பர்கள் அப்பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர். அவர்கள் எவ்வளவு முயன்றும் அவளை காப்பாற்ற முடியவைல்லை. ஆகவே உடனடியாக தீயணைப்புத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் அப்பெண்ணை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 12 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, நேற்று மாலை விழுந்த அப்பெண், இன்று பிற்பகலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாறை இடுக்கில் சிக்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.